பொதுத்தேர்தலே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு- மகிந்த கருத்து

அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமற்றநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பான யோசனை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்ட யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

உரிய நிர்வாகம் இல்லாததால் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் ஸ்திரமற்ற நிலை அனைவரையும் பாதிக்கின்றது, எனக்குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி தனது வீட்டின் பொருட்களை விற்பது போல எவரும் தேசிய சொத்துக்களை விற்ககூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு பொதுத்தேர்தலை நடத்துவதே ஒரே வழியெனவும் அவர் தெரிவி;த்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடியும் என கருதவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!