நாடா­ளு­மன்­றம் தீர்­மா­னித்­தால் செப்­ரெம்­ப­ரில் தேர்­தல் நடக்­கும்!!

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லின் போது காணப்­பட்ட குறை­களை நிவர்த்தி செய்து புதிய தேர்­தல் முறை­மை­யில் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்கே அரசு உத்­தே­சித்­துள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் இறுதித் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டால் செப்­ரெம்­பர் மாதத்­தில் தேர்­தலை நடத்த முடி­யும். இவ்­வாறு மாகாண சபை மற்­றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்­சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­தார்.
அவ­ரது அமைச்­சில் நேற்று இடம் பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் கலந்துகொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. உறுப்­பி­னர்­க­ளின் தொகை­யை அதி­க­ரிப்­ப­தால் மாத்­தி­ரம் மக்­க­ளுக்கு முறை­யான சேவை­வை வழங்கி விட முடி­யாது. எதிர்­வ­ரும் காலங்­க­ளில் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது தொடர்­பில் அரச தலை­வர் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார்.

கூட்டு அர­சில் ஒவ்­வொரு துறை­க­ளி­லும் காணப்­ப­டும் குறை­பா­டு­கள் தொடர்­பில் குற்­றஞ் சுமத்­து­வது ஒரு சில­ரின் அர­சி­யல் கொள்­கை­யாக காணப்­ப­டு­கின்­றது. தற்­போது மாகாண சபை­கள் தொடர்­பில் அர­சின் மீது பொய்­யான குற்­றங்­களை சுமத்தி வரு­கின்­ற­னர்.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி தேர்­த­லுக்கு பயம் என்ற கார­ணத்தால் தேர்­தலை தொடர்ந்து பிற்­போட்டு வரு­கின்­றது என்று குற்­றம் சுமத்­து­கின்­ற­னர்.

உள்­ளூ­ராட்­சித் இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில் நீதி­யா­ன­தும், சுயா­தீ­ன­மா­ன­து­மா­கவே இடம் பெற்­றது. புதிய தேர்­தல் முறை­மை­யைப் பயன்­ப­டுத்தி பல விட­யங்­கள் நீக்­கப்­பட்டு தேர்­தல் இடம் பெற்­றது.

மாகாண சபைத் தேர்­த­லும் தற்­போது பல­ரின் எதிர்­பார்ப்பை பெற்­ற­தாகக் காணப்­ப­டு­கின்­றது. சிலர் பழைய தேர்­தல் முறை­மை­யில் மாகாண சபை தேர்­த­லை நடத்த அர­சுக்கு அழுத்­தம் பிர­யோ­கித்து வரு­கின்­ற­னர்.

மாகாண சபை தேர்­தல் எக்­கா­ர­ணத்துக்காகவும் பழைய முறை­மை­யில் இடம் பெற­மாட்­டாது. கூட்டு அரசு ஒரு­போ­தும் அதற்கு அனு­மதி வழங்­காது. இந்தத் தேர்­தல் முறை­யில் குறைப்­பா­டு­கள் காணப்­ப­டு­கின்­றன என்று கூறு­ப­வர்­கள் தேர்­த­லில் எதிர்­பார்த்த பெறு­பே­கள் கிடைக்­கப்­பெ­றா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். புதிய தேர்­தல் முறை­யின் கார­ண­மாக உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லில் பல விட­யங்­கள் புதி­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது நடை­மு­றை­யில் உள்ள தேர்­தல் முறை­மை­யில் சில குறை­பா­டு­கள் இருந்­தால் அவற்­றுக்­கான தீர்வை மாத்­தி­ரமே காண­வேண்­டும். அதற்­காக இந்­தத் தேர்­தல் முறை­மை­யை இல்­லா­மல் செய்து பழைய தேர்­தல் முறை­மை­யை மீண்­டும் கொண்டு வரு­வது சாத்­தி­ய­மற்ற விட­யம்.

மாகாண சபைத் தேர்­தல் இடம் பெறு­வ­தற்கு முன்­னர் தற்­போது நடை­மு­றை­யில் உள்ள தேர்­தல் முறை­யின் குறைபாடு­கள் நிவர்த்தி செய்­யப்­பட்டு உத்­தே­சிக்­கப்­பட்ட மாதத்­தில் தேர்­தல் நடத்­தப்­ப­டும். நாட்டு மக்­க­ளும் புதிய தேர்­தல் முறை­மை­யையே விரும்­பி­யுள்­ள­னர்.

மக்­க­ளின் தேவை­களை உணர்ந்தே அரசு செயற்­படவேண்­டும். பழைய தேர் தல் முறை­மை­யை ஆத­ரிப்­ப­வர்­கள் தமது சுய நல விட­யங்­களை மாத்­தி­ரம் கருத்­திற் கொண்டு அர­ சில் தாக்­கம் செலுத்­து­கின்­ற­னர் என்­பது மாத்­தி­ரம் உண்­மை­யாக காணப்­ப­டு­கின்­றது -– என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!