அரசியல் சூழ்ச்சி இதுவல்ல!

நாட்டில் கடந்த 50 நாட்களாக இடம்பெற்றது ஒரு பாரிய சூழ்ச்சி என ஐக்கிய தேசியக் கட்சி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த 50 நாட்களாக இடம்பெற்றது ஒரு பாரிய சூழ்ச்சியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பினர் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்ச்சியைத் தோற்கடித்ததன் ஊடாக, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும் அந்தத் தரப்பினர் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள்.இது ஒன்றும் அரசியல் சூழ்ச்சியல்ல. எனவே, இனியும் காரணங்களைக் கூறிக்கொண்டிருக்காமல் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் .

உண்மையான சூழ்ச்சி 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தான் நாட்டில் இடம்பெற்றது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. எமது நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்கும் நிலைமை ஏற்பட்டது. மக்களுக்கு வாழ்க்கைச் சுமை மற்றும் வரிச்சுமை என்பன அதிகரித்தது.

மேலும் மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் என்பன இந்தக் காலத்தில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதுபோன காரணத்தினால்தான், ஜனாதிபதி ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்த முடிவினை எடுத்தார்” என திஸ்ஸ வித்தாரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!