பிரிட்டன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது.

கோவா மாநிலம் பலோலம் பீச் அருகே தங்கியிருந்த பிரிட்டனைச் சேர்ந்த 48 வயது பெண் நேற்று அதிகாலை கேனகோனா ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் தனியாக நடந்து வருவதைக் கவனித்த மர்ம ஆசாமி, அந்த பெண்ணை திடீரென தாக்கி நிலைகுலையச் செய்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அத்துடன் அந்த பெண் கொண்டுவந்த லக்கேஜ்களையும் (3 பேக்) திருடிச் சென்றுள்ளான். திருடிச் செல்லப்பட்ட பைகளில், அந்த பெண்ணின் பாஸ்போர்ட், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பொருட்கள் இருந்தன. தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

திருட்டுப்போன பொருட்களில் பணம் தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் பெண் அளித்த தகவல் மற்றும் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளியை மார்கோ ரெயில் நிலையத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!