சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்திய பெருமை சம்பந்தனையே சேரும் – சுமந்திரன்

நாட்டை சர்வாதிகாரத்திற்கு கொண்டு செல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையே சாரும் என அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன் தென்னிலங்கையில் உள்ள மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான மதிப்பு இன்று வானுயர வளர்ந்திருக்கின்றது. இது புதிய அரசமைப்புத் தொடர்பில் அவர்களுடன் உரையாடும்போது, அவர்களிடம் அதனைக் கொண்டு செல்கின்றபோது எங்கள் மீதுள்ள அந்த மதிப்பு புதிய அரசப்பை அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும்.

இந்த நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடையும்போது முதலாவது பாதிக்கப்படுவது தமிழ் மக்களாகவே இருப்பார்கள் எனவும் அவர் சுட் டிக்காட்டினார்.

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 13 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்றுப் பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!