ஊடகப் படுகொலைகளுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் நாளை போராட்டம்

ஊடகப் படுகொலைகளுக்கு நீதி கோரி, வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பில் நாளை பாரிய கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

ஊடகவியலாளர் டி.சிவராமின் 13 ஆவது நினைவு நாளை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது,

படுகொலை செய்யப்பட்ட 41 தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

நாளை காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!