ஈபி­டிபி எல்­லாம் ஒரு கட்சி என்று அத­னு­டன் பேச்சு நடத்­து­வோமா?

ஈபி­டிபி எல்­லாம் ஒரு கட்சி என்று உள்ளூ­ராட்சி சபை­க­ளில் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க நான் அவர்­க­ளு­டன் பேரம் பேசி­ னேனா? அதற்­கான ஆதா­ரங்­கள் இருந்­தால் வெளி­யி­டட்­டும் ­பார்க்­க­லாம் என்று தெரி­வித்­தார் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.

யாழ்ப்­ப­ணத்­தில் நேற்­றுச் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர் இத­னைத் தெரி­வித்­தார். உள்­ளு­ராட்சி சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைக்க ஈபி­டி­பி­யி­டம் ஆத­ரவு கோரி­ய­தா­க­வும் அதற்­கான ஆதா­ரங்­கள் தம்­மி­டம் இருப்­ப­தா­க­வும் அந்­தக் கட்­சியை சேர்ந்த மூத்த உறுப்­பி­னர்­கள் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­னர்.இது தொடர்­பாக உங்­க­ளின் பதில் என்­ன­வென ஊட­க­வி­ய­ல­ளர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு பதிலை வழங்­கும் போதே அவர் இதனை தெரி­வித்­தார்.

“வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் உள்ள சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்க நாம் யாரி­ட­மும் பேரம் பேச­வில்லை. ஈபி­டிபி ஒரு கட்சி என்று நான் அவர்­க­ளு­டன் பேசி­னேனா? அவ்­வாறு நான் பேசி இருந்­தால் ஆதா­ரங்­களை வெளி­யி­டு­மாறு கேட்­கின்­றேன்.இது தொடர்­பாக நான் அதி­க­மாக அலட்­டிக்­கொள்ள விரும்­ப­வில்லை” என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!