பன்­னாட்டு நீதி­ப­தி­களை நிய­மிக்க மங்­கள யாரி­டம் அனு­மதி பெற்­றார்?

முன்­னாள் அயலுறவு அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, யாரி­டம் கேட்டு பன்­னாட்டு நீதி­ப­தி­ களை உள்­ள­டக்­கிய ஜெனி­வாப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­னார் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் ரணில் எதிர்ப்­புக் குழு­வின் முக்­கி­யஸ்­த­ரான தயா­சிறி ஜய­சே­கர கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­தி­யக்­கு­ழுக்­கூட்­டம் அண்­மை­யில் அர­ச­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அர­ச­த­லை­வர் இல்­லத்­தில் நடை­பெற்­றது. அங்கு தயா­சி­றி ­ஜ­ய­சே­கர மேற்­கண்­ட­வாறு கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளார்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­ன­தும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­தும் கொள்­கை­கள் வேறு­பட்­டவை. எனவே தொடர்ந்து தேசிய அரசு பய­ணிக்க முடி­யாது. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­ போது தேசிய அரசு அமைப்­ப­தாக அர­ச­த­த­லை­வர் வாக்­கு­று­தி­ய­ளித்­தார்.

ஆனால் அந்­தத் தேர்­த­லில் அந்­தக் கட்­சிக்­குப் பெரும்­பான்மை கிடைக்­கா­த­தால் இறு­தி­யில் தேசிய அரசு அமைக்­கப்­பட்­டது. அந்­தத் தேசிய அர­ சில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தனக்­கேற்ற வகை­யி­லேயே செயற்­பட்­டது. குறிப்­பா­கப் பன்­னாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய ஜெனி­வாத் தீர்­மா­னத்­துக்கு அப்­போ­தைய அயலுறவு அமைச்­சர் மங்­க­ள­ச­ம­ர­வீர தான்­ தோன்­றித்­த­ன­மா­கவே இணக்­கம் வெளி­யிட்­டார். அர­ச­த­லை­வ­ரி­டம்­கூட அவர் கேட்­க­வில்லை.

அதே­போன்று அம்­பாந்­தோட்டை த் துறை­முக விவ­கா­ரத்­தி­லும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கைகளே ஓங்­கின. எண்­ணெய் தாங்­கி­களை இந்­தி­யா­வுக்கு வழங்­கும் யோச­னை­க­ளை­யும் நாம் எதிர்த்­தோம். கொழும்­புத்­து­றை­மு­கத்­தின் தெற்கு இறங்கு துறை­முக விவ­கா­ரத்­தி­லும் சிக்­கல் ஏற்­பட்­டது.

அத்­து­டன் தனி­யார் மயப்­ப­டுத்­தல் தொடர்­பில் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் கொள்கை என்ன? ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­டன் நாம் இந்த விட­யத்­தில் நெருங்­க­வும் முடி­யாது. பொரு­ளா­தார தீர்­மா­னங்­களை ஐக்­கிய தேசி­யக் கட்­சியே எடுத்­தது.

வரவு, செல­வுத் திட்­டங்­க­ளில் எமது யோச­னை­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. அத்­து­டன் நிறை­வேற்று அதி­கார அர­ச­த­லை­வர் முறை­மையை மாற்றி அமைப்­பது தொடர்­பில் எமது கொள்கைக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கொள்­கைக்­கும் வித்­தி­யா­சம் உள்­ளது. எனவே தொடர்ந்­தும் எம்­மால் தேசிய அர­சில் பய­ணிக்க முடி­யாது. அத­னால் தான் நாங்­கள் தேசிய அர­சி­லி­ருந்து வில­கு­கின்­றோம்.

தேசிய அர­சில் நீடிக்க விரும்­பு­கின்­ற­வர்­கள் அதில் நீடிக்­க­லாம். ஆனால் விரை­வில் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்­டும். அடுத்த மையக் குழுக்­கூட்­டத்­தில் இது தொடர்­பில் முடி­வெ­டுக்­க­வேண்­டும். அதா­வது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து எப்­போது வில­கும் என்ற முடிவை அடுத்த மையக் குழுக் கூட்­டத்­தில் எடுக்­க­ வேண்­டி­யது அவ­சி­யம் – – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!