சிறிலங்கா கடற்படைக்கு புதிய தளபதி

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக றியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை- 2019 ஜனவரி 01ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், றியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிறிலங்கா கடற்படையின் 23 ஆவது தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாக, சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படையின் தலைமை அதிகாரியாக இருந்த றியர் அட்மிரல் பியல் டி சில்வா, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க இன்றுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து, றியர் அட்மிரல் பியல் டி சில்வா தமது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!