திடீரென வெடித்து சிதறிய முட்டையால் பறிபோன கண்கள்: வலியால் அவதியுறும் யுவதி

பிரித்தானியாவில் முட்டை திடீரென வெடித்ததால் இளம்பெண் தற்காலிகமாக கண் பார்வையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த, கோர்ட்னி வுட் (19). இவர் கடந்த 26ஆம் திகதி பாக்சிங் தினத்தன்று தனது வீட்டில் இருந்த மைக்ரோ ஓவன் உள்ளே முட்டையை வைத்துள்ளார். பின்னர் முட்டையை அங்கிருந்து வெளியில் எடுத்தபோது திடீரென முட்டை வெடித்தது.

இதில் கோர்ட்னியின் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை, இதையடுத்து வலியால் துடித்த கோர்ட்னி முகத்தில் குளிர்ந்த நீரை ஊற்றி கொண்டபின் நண்பருக்கு தெரிவித்ததையடுத்து, வைத்தியசாலைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கோர்ட்னியின் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டதும், ஆனால் இது தற்காலிகமானது தான் எனவும் தெரியவந்தது.

சில நாட்கள் வைத்தியசாலையில் கோர்ட்னி தங்கி சிகிச்சைபெற்ற நிலையில் வலது கண் பார்வை முழுவதுமாக குணமானது.ஆனால் இடது கண்ணில் தொடர்ந்து அவருக்கு பிரச்சனை உள்ளது.

எனவும், என் வாழ்க்கையில் நான் அனுபவித்த பயங்கரமான வலி இதுதான், இது போல யாருக்கும் நடக்கக்கூடாது எனவும் அவர் வருந்தியுள்ளா

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!