மஹிந்த ராஜபக்ஷவே எதிர்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நடவடிக்கை அவசியம் -வாசுதேவ நாணயக்கார

பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தின் முதற் கூட்டத்தொடரில் சபாநாயகர் முறையான தீர்வை முன்வைக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை இனியும் நீடிக்க அனுமதிக்க முடியாது என பாரளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே எதிர்க்கட்சி தலைவர் என்று சபாநாயகர் அறிவித்த பின்னரும், கூட்டமைப்பினர் எதிர்க்கட்சி அலுவலகத்தை விட்டு நீங்காமல் இருப்பது தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும். அல்லது பொலிஸ் தரப்பினரை கொண்டு இவர்களை வெளியேற்ற வேண்டும் என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆட்சி பொறுப்பை ஒப்படையுங்கள் பொதுத்தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானிக்கு அமைய ஜனவரி 5ஆம் திகதி அதாவது நாளை பொதுத்தேர்தலை நடத்துவதாக அரசியல் நெருக்கடியின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் , அக் கட்சியின் உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று தேர்தல் இடம் பெறவில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தலை ஒரு போதும் நடத்தும் உபாயங்களை தேட மாட்டார். மாறாக தேர்தல்களை காலவரையறையின்றி பிற்போடும் உபாயங்களை மாத்திரம் நன்கு அறிவார்.

ஆகவே தற்போதைய அரசாங்கம் தங்களது பிரச்சினைகளை மாத்திரமே தீர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றது.மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அபிவிருத்திகளை முன்னெடுக்கவும் முடியாது.மறுபுறம் அதற்கான காலமும் தற்போது கிடையாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!