மைத்திரியை அகற்ற ஜனாதிபதி தேர்தல் அவசியம்!

உயர்நீதிமன்றத்தினால் குற்றம்சுமத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களினாலும் சர்வதேசத்தினாலும் மதிப்பிழந்த ஒருவராகவே பார்க்கப்படுகின்றமையால் இப்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘ அண்மையில் நாட்டில் அரசியல் குழப்பத்தினை உருவாக்கிய விடயத்தில் ஜனாதிபதி மைத்திரியே அனைவரும் குறை கூறுகின்றனர். மேலும் நாட்டின் அரசியலமைப்பை மீறியே தனது செயற்பாடுகள் அனைத்தையும் ஜனாதிபதி முன்னெடுத்தார். இதனால் அவர் மீது மக்களிடமும் சர்வதேசத்திடமும் எந்ததொரு மரியாதையும் இல்லாமல் போயுள்ளது. ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகிய தேர்தலை நடத்துவதை காட்டிலும் ஜனாதிபதி தேர்தலை நடத்தி நாட்டின் சிறந்த தலைவரை நியமிக்க வேண்டியதே அவசியம்” என குமார வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!