நான் விலகியதாலேயே தயாசிறிக்கு பொதுச் செயளாலர் பதவி – ரோஹன லக்ஷ்மன் பியதாச

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகுவதாக அறிவித்ததாலேயே தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார். இந்த நியமனத்தில் வேறு எந்த மறைமுக விடயங்களும் இல்லை என பேராசியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெளிவுபடுத்துகையில்,

கட்சி உறுப்பினர்களானாலும், தொகுதி அமைப்பாளர்களானாலும் யாராக இருந்தாலும் கட்சியை விமர்சிப்பதற்கும் குறைகளை சுட்டிக்காட்டுவதற்கும் உரிமை உள்ளது. அவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டிய பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது. எனவே இவை தொடர்பிலும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!