“எதிர் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரி வெற்றிக்கொள்வார்”

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை களமிறக்கினாலும் அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறக் கூடியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாத்திரமே. எனவே அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவரே வேட்பாளராகக் களமிறக்கப்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயளாலராக இன்று வியாழக்கிழமை தயாசிறி ஜயசேக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகவியாலளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தயாசிறி தெரிவிக்கையில்,

சுதந்திரகட்சி எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தாலும் பொது வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே களமிறக்கப்படுவார். மஹிந்தராஜபக்ஷவும் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!