சிறைகளில் 1299 மரணதண்டனைக் கைதிகள்!

மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்துள்ள 1,299 கைதிகள் , சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 1,215 ஆண்களும் 84 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் 789 ஆண் கைதிகளும், 34 பெண் கைதிகளும் மேன்முறையீடு செய்துள்ளனர். மரண தண்டனைக்கு உட்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலையில் 476 கைதிகள் உள்ளனர் எனவும், அவர்களில் 426 ஆண்களும் 50 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!