இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்த முயற்சி : விமல்

மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னர் சர்வதேச தேவைகளை நிறைவேற்றவும் எமது இராணுவத்தை சர்வதேச கூண்டில் நிறுத்தவும் ஏதுவான சூழலை உருவாக்கவே இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் ஒரு மதக் குழுவின் கட்டுபாட்டுக்குள் உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டமூலம் மற்றும் ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் தூதுவர்கள் செயற்பட்ட விதம் எவ்வாறு என்பது அவதானிக்க முடிந்தது. எமது இராணுவத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று தண்டிக்கவே முயற்சித்து வருகினனர். கடந்த பத்து ஆண்டுகளை காரணம் காட்டி நாட்டினை மீட்டெடுக்க முடியாது என கூறினார்கள். இன்று அதனை மறந்து கடந்த 51 நாட்கள் நெருக்கடிதான் நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் என கூறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!