ரோனில் ரோன் சிங்தான் “தேசத்தின் கதாநாயகன்” – ட்ரம்ப் புகழாரம்

சட்டவிரோத அந்நியர்களினால் ரோனில் ரோன் சிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமெரிக்காவின் இதயம் நொறுங்கி விட்டதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப், நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோத அந் நியர்களை தடுத்து நிறுத்தியபோது உயிர் நீத்த ரோனில் ரோன் சிங்தான் அமெரிக்காவின் “தேசத்தின் கதாநாயகன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நியூமன் நகரில் பொலிஸ் அதிகாரியாக பயணியாற்றிய இந்தய வம்சாவளியைச் சேர்ந்த ரோனில் ரோன் சிங் (வயது 35), கடந்த 26 ஆம் திகதி போக்குவரத்து கடையிலிருந்தபோது மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய அந்த இளைஞரை கலிபோர்னியா பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந் நிலையில், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய டிரம்ப், சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய பொலிஸ் அதிகாரி சிங் ‘தேசத்தின் கதாநாயகன்’ என தெரிவித்து அவருக்கு புகழாரம் சூட்டினார்.

மேலும் அவரை காட்டுமிராண்டி தனமாக சுட்டுக்கொலை செய்த மெக்ஸிக்கோ இளைஞனை ‘ஏலியன்’ என்றும் சாடினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!