திலங்க சுமதிபாலவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால உட்பட பலரிற்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தனது முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இடம்பெற்ற ஊழல்களிற்கு காரணமான பலரிற்கு எதிராக நான் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆட்டநிர்ணய சதி மற்றும் ஒலிபரப்பு உரிமையை வழங்குவதில் இடம்பெற்ற ஊழல்முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகளை சுமத்தியுள்ளேன் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் இலங்கை அணி சமீபத்தில் சந்தித்துள்ள பின்னடைவுகளிற்கு மோசடிகளே காரணம் எனவும தெரிவித்துள்ளார்.

நான் மாத்திரம் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்யவில்லை கிரிக்கெட் வீரர்கள் உட்பட வேறு பலதரப்பினரும் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!