சாராயத்தில் விஷம் கலந்த ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை: – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

போளூரில் சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் குடித்து 13 பேர் 2000ம் ஆண்டில் போளூரில் இறந்தனர். 13 பேர் இறந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. காமாட்சி என்பவர் விற்ற சாராயத்தில் விஷம் கலந்த 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கள்ளச் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக விஷம் கலந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

விஷம் கலந்த சாராயத்தை அருந்திய பலர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பளிக்க பாதிக்கபப்ட்டவர்கள் சார்பில் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை நீதிமன்றம் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!