ஜனாதிபதி கொலை சதி- நாமலிடம் நாளை விசாரணை

மிக முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்வதற்கான சதி முயற்சி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை சிஐடியினரிடம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை வழங்கிய வாக்குமூலங்கள் குறித்து விசாரணை செய்வதற்காகவே சிஐடியினர் தன்னை அழைத்துள்ளனர் என நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய பிரஜை தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச விமல்வீரவன்ச விமல்வீரவன்சவின் மனைவி ஆகியோரை விசாரணை செய்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை தான் நாமல் ராஜபக்சவுடன் தொடர்புவைத்திருந்ததாகவும் விமல்வீரவன்சவின் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!