வலி உணர்வோம்!!

இப்பிடியேபோனா இன்னும் கொஞ்ச நாளிலை எல்லாரும் இந்த வெயிலுக்க கிடந்து செத்துப்போயிருவம். இது பரவாயில்லை… அங்கைபோய்ப் பாத்தீங்க எண்டாத் தெரியும்… அது ஒரு சின்ன முள்ளிவாய்க்காலேதான். அதுகள் கிடந்து பொசுங்கிக் கொண்டிருக்குதுகள். அதிலை ஒருத்தர்… ஆள் வருத்தக்காரரும்தான்… ஆனா நல்லா இருந்த மனுசன்… முதல் நாள் களிமண் குழைச்சு சாந்துக்கரண்டியால கல்லடுக்கிக் குந்துகட்டிக் கொண்டிருந்த மனுசன்… உந்த வெயிலுக்க… தகரக் கொட்டிலுக்க கிடந்தா…? ஆள் முடிஞ்சுது…!

வயசுபோன ஆக்கள், சின்னப் பிள்ளையள் எண்டு இஞ்சையிருக்கிற பதினாறு குடும்பத்திலையும் பலபேர் இருக்குதுகள்… இப்பிடியேபோன ஒராள் தேறாது…’’’ இது சந்தனத்தரையிலுள்ள சசி. மூன்று பிள்ளைகளின் தந்தை.

சந்தனைத்தரையை அண்மித்த மல்லந்தரையில் குடியேறியவர்களில் ஒருவர் கடந்தவாரமளவில் சாவடைந்திருந்தார். அந்தச் சாவுக்குரிய உடனடிக்காரணமாக அதிகரித்த வெயிலும், கொதித்துக்கொண்டிருக்கின்ற அந்தத் தரையில் அவர்கள் அமைத்திருக்கின்ற தகரக் கொட்டில்களுமே சிலாகிக்கப்பட்டன. அவருடைய இறப்புக்கு இவையெல்லாம்தான் காரணமா? இல்லையா? என்பது தொலைவில் வைக்கப்பட்டாலும், அங்கு குடியேறிய ஏனையவர்களின் நிலையும் பரிதாபத்துக்குரியதாகத்தான் இருக்கிறது…

எவ்­வ­ளவு முயற்சி செய்­தும் முடி­ய­ வில்லை. எப்­படி முனைந்­தா­லும் தோல்­வி­தான் எட்­டிப்­பார்க்­கி­றது. அந்த வெயி­லின் உச்­சத்தை எப்­ப­டித்­தான் சொல்­வது…? சூடே­றிய அந்­தத் தரைக்­கும் முறு­கிச் சுருண்­டு­கொள்­வ­தைத் தவிர வேறு வழி­யி­ருக்­க­வில்லை. கொதி­நிலை அதி­க­மா­கிக் கொண்­டி­ருந்­தது. பாத­ணி­க­ளுக்கு மேலாக ஏறி, குதிக்­கா­லைப் பதம் பார்க்க விளைந்­தது வெயில். ‘அப்­பாடா’ என்­ற­படி அவர்­கள் அமைத்­தி­ருக்­கும் கொட்­ட­கைக்­குள்­போய் ஒதுங்­கிக் கொண்­டேன்.

என்ன கொடுமை…! உள்ளே வெக்கை இன்­னும் அதி­க­மா­கி­விட்­டி­ருந்­தது. சரு­மம் எரிந்­து­கொண்டு வந்­தது. கூடவே புளுக்­கம். வியர்வை நீராட்ட விழைந்­தது. அவர்­கள் அமைத்­தி­ருக்­கும் கொட்­ட­கைக்­குள் நிற்பதைக்ககாட்டிலும் வெட்ட வெளி­யில் நிற்­பது உத்­த­ம­மா­கப் பட்­டது. ஆனா­லும் அவர்­கள் அனை­வ­ருக்­கும் அந்­தத் தக­ரக்­கொட்­ட­கை­கள் தான் தஞ்­சம். சசி சொன்­ன­தைப்­போ­லத்­தான்… அவர்­கள் வெந்­து­கொண்­டி­ருந்­தார்­கள்.

இது­மட்­டு­மல்ல சசி
இன்­ன­மும் சொன்­னார்…

‘‘எங்­கட சொந்த இடம் பலாலி. உத­ய­கல வாசா­லை­யடி. முருக்­கடி எண்­டுற இடத்­தில இருந்­த­னாங்­கள். எங்­க­ளுக்கு அங்கை மூண்டு பரப்­புக் காணிக்­குக்­கிட்­டக் கிடக்கு. எனக்கு மட்­டு­மில்ல இஞ்சை இருக்­கிற எல்­லா­ருக்­குமே அங்கை ஒண்டோ, ரெண்டோ பரப்­புக் காணி­யா­வது இருக்­குது. நல்ல இடம்… நல்ல தண்ணி… சின்­னத் தோட்­டம் வைப்­பம். சில­வேளை தோட்­டக்­கூ­லிக்­கும் போவம்… சிலர் சீவல் தொழில் செய்­வி­னம், கடக்­க­ரையை அண்­டி­யி­ருக்­கி­றவை மீன்­பி­டிப்­பி­னம், சில காலங்­க­ளிலை தோட்­டம் செய்­வம். இல்­லாட்­டிக் கூலி­வே­லைக்­குப் போவம். வாழ்க்கை நல்­ல­ப­டி­யப் போய்க்­கொண்­டி­ருந்­துது.

தொன்­னூ­றாம் ஆண்டு இடம்­பெ­யர்ந்­த­னாங்­கள். கையில கிடைச்ச சமா­னு­களை எடுத்­துக்­கொண்டு போட்­டி­ருந்த உடுப்­புக­ளோடை வெளிக்­கிட்­ட­னாங்­கள்… பதி­னாறு, பதி­னேழு குடும்­பங்­களா இஞ்சை வந்து(உடுப்­பிட்டி) முகா­மிலை இருந்­த­னாங்­கள். பிறகு அதிலை கிடந்த காணி ஒண்­டுக்­குள்ள எல்­லா­ரும் வீடு­க­ள­மைச்சு இருந்­தம். கிட்­டத்­தட்ட இரு­பத்­தெ­ழு­வ­ரு­சம் இருந்­த­னாங்­கள். அது வெளி­நாட்­டிலை இருக்­கிற ஒருத்­தற்ற காணி­யாம். அவர் கோட்­சில கேஸ்­போட்டு எங்­களை எழும்­பச் சொல்லி நோட்­டீஸ் அனுப்­பீற்­றார். நாங்­கள் எழும்­பீற்­றம்’’

பத்து வரு­டங்­கள்­வரை ஓரி­டத்­தில் தொடர்ச்­சி­யாக வசித்­தால், வசித்­த­வர்­க­ளுக்கு அந்த நிலத்­தில் உரிமை இருக்­கி­றது என்­றும், அவர்­களை அங்­கி­ருந்து அகற்­று­வ­தாக இருந்­தால் அவர்­கள் குடி­ய­மர்­வ­ தற்­கேற்ப நிலத்­துண்டை வழங்­க­வேண்­டும் என்­றும் உலா­வு­கின்ற செவி­வ­ழிக்­க­தை­கள் இவ்­வி­டத்­தில் உங்­க­ளைப்­போ­லவே எனக்­கும் பொறி தட்­டின. ஆனால், சசி தொடர்ந்து கூறி­னார்.

‘‘எங்­களை அந்த மனு­சன் தன்ர காணிக்­குள்ளை இவ்­வ­ளவு கால­மும் இருக்­க­விட்­டதே பெரிய காரி­யம்! நோட்­டீஸ் வந்த உடனை நாங்­கள் இருக்­கி­ற­துக்­குக் காணி விசா­ரிக்­கத் தொடங்­கி­னம். எல்­லா­ரும் ஒரே­யி­டத்­திலை இருக்­கி­ற­மா­தி­ரிக் காணி கிடைக்­க­யில்லை. இதிலை(சந்­த­னத்­தறை) 13பரப்­புக்­காணி வாங்­கி­னது. ஆறு குடும்­பங்­கள் இருக்­கி­றம். ஆளுக்கு இவ்­வி­ரண்டு பரப்­புக் காணிப்­படி பங்­கிட்­ட­னாங்­கள். பொதுக்­கி­ணத்­துக்­கும் உந்த ஒழுங்­கைக்­கும் மிச்­சத்தை விட்­டி­ருக்கு. ஒரு பரப்பு ஒண்­டே­கால் லச்­சம். ஜி.எஸ்­மார் குடும்­பத்­துக்கு ெரண்டு இலட்­சம் தந்­தவை. நாங்­கள் ஆளுக்கு அம்­ப­தா­யி­ரம் போட்­ட­னாங்­கள். ஆனா அங்­காலை மல்­லந்­த­ரை­யில இருக்­கி­ற­வை­யின்ர காணி விலை­கூட. அதிலை ஏழு குடும்­பங்­கள் இருக்கு. அங்­கை­யும் ஆளுக்கு ரெண்டு பரப்­புப்­படி வாங்­கி­னவை. இஞ்­சாலை இன்­னொரு இடத்­தி­லை­யும் காணி வாங்­கி­னது. அதிலை மூண்டு குடும்­பங்­கள் இருக்கு…’’

‘‘காணி­வாங்­கி­ற­துக்கு இரண்டு இலட்­சம் தந்­தி­ருக்­கி­னம். வீட்­டுத் திட்­டங்­க­ளும் ஏதா­வது தாற மாதிரி…?’’ என்று இடை­ம­றித்த நான், இழுத்­தேன்.
‘‘ஓ… நாங்­கள் காணி வாங்­கி­ற­துக்­குக் காசுக்கு அந்­த­ரப்­பட்­டுக் கொண்­டி­ருக்க அவை சமுர்த்­தி­யிலை ரெண்டு இலச்­சம் லோன் எடுத்­துத் தந்­த­வை.­ நாங்­கள்தான் அதைக் கட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றம்’ என்­றார்’’.

அத்­தோடு, ‘‘வீட்­டுத் திட்­டம் தாற மாதி­ரித் தெரி­யேல்லை. எல்­லா­ரும் இந்­தத் தக­ரத்­துக்க கிடந்து சாகிற நில­மை­போ­ல­தான் கிடக்கு. இஞ்சை குடிக்­கிற தண்­ணி­யில்லை. கிணத்­துத்­தண்ணி உப்பு. குடிக்­கிற தண்­ணிக்கு உங்­காலை (கையால் திசை காட்­டி­னார்) போக­வே­ணும். விடி­ய­முன்­னம்­போய்த் தண்ணி எடுத்­துக்­கொண்டு வந்­தி­ரு­வம்.

அதை­விட… (அவ­ருடை பேச்­சுப் பிசிறு தட்­டி­யது. தெனிப்­பில் வித்­தி­யா­சம்) மற்­ற­துக்­குப் போற­தெண்­டா­லும் விடி­ய­முன்­னமே போயி­ர­வே­ணும். இங்­காலை இருக்­கிற சின்­னப் பத்­தை­ய­ளுக்­க­தான். இஞ்சை நிறை­யச் சின்­ன­னு­கள் இருக்கு. இதாலை அது­க­ளுக்கு வருத்த துன்­பம் வந்­தா­லும் வந்­தி­ரும்… அதோடை குமர்ப் புள்­ளை­யள், பொம்­பி­ளை­யாக்­கள் எல்­லா­ருமே இதாலை சரி­யாக் கஸ்­ரப்­ப­டு­கு­து­கள்.

இப்ப எங்­க­ளுக்கு ரொய்­லெற் கட்­டச் சொல்லி அம்­பத்­தை­யா­யி­ரம் ரூபா தந்­தி­ருக்கு. அந்­தக் காசுக்கை ரொய்­லெற் கட்­டி­மு­டிக்­கி­றது கஸ்­ரம். அந்­தக் காசுக்க சமா­ளிப்­பம் எண்­டால் அவை சொல்­லுற மாதி­ரித்­தான் கட்­ட­வும் வேணும்… அதுக்கு டபுள் காசு போகும். இப்­ப­தான் காணிக்­குக் கடன்­பட்­டது. கிழ­மைக்­குக் கிழமை அதைக் கட்­ட­வே­ணும்…’’ இப்­போது அவ­ரு­டைய வார்த்­தை­கள் தயங்­கின. இது அங்­குள்ள அவர்­போன்­ற­வர்­க­ளின் தேக்க நிலை­யை­யும், பொரு­ளா­தார வறட்­சி­யை­யும் சுட்­டு­ வ­தாக உணர்ந்­தேன்.

சந்­த­னத்­தரை, மல்­லந்­தரை என இவர்­கள் புதி­தா­கச் சொந்­த­மாக்­கி­யி­ருக்­கின்ற இ­ருப்­பி­டங்­கள் மூன்­றி­லுமே முதன்­மை­யாக இருப்பது இந்த ‘மல­ச­ல­கூட’ இட­ரே. அதைச் சமா­ளிக்­கும் எத்­த­னங்­களே தற்­போது நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. தந்தை – மகள், கண­வன் – மனைவி என அவர்­கள் ஒன்­றி­ணைந்து, கொழுத்­திக் கொண்­டி­ருக்­கும் வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தாது, சீமெந்­துக் கல­வை­யைக் குழைப்­ப­தி­லும், தமக்­கான மல­ச­ல­கூ­டங்­க­ளைக் கட்­டி­வி­டு­கிற இதர செயல்­க­ளி­லும் மும்­மு­ரம் காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். வெயி­லைக் காட்­டி­லும் அவர்­களை அதி­கம் வாட்­டி­யெ­டுப்­பது அது.

() () () ()

அங்­குள்ள தக­ரக் கொட்­ட­கை­கள் எல்­லாமே அண்­ண­ள­வில் ஒரே மாதிரி இருந்­தன. அதில் ஒன்­றில் மேல­தி­க­மாக உயர்ந்த ஒரு தக­ரப் பந்­தல் இணைக்­கப்­பட்­டி­ருந்­தது. இறந்­த­வீடு என்­பதை அது உணர்த்­தி­யது.

இறந்­த­வ­ரின் மனைவி சோக மய­மா­கிக் கிடந்­தார். இனம்­காண அது உத­வி­யது. அவ­ரி­டம் துக்­கம் விசா­ரித்து முடிந்­தது. அவர் கதைக்­கத் தொடங்­கி­னார்.
‘‘அவர் வருத்­தக்­கா­ரர்­தான். ஆனா… வடி­வாத்­தான் இருந்­த­வர். முதல் நாள் வேலை செய்த மனு­சன். இதிலை கிடந்­த­வர். இஞ்சை சரி­யான வெக்கை எண்­டாப்­போல நான் மக­ளின்ரை கொட்­டி­லுக்­கை­போய்க் கிடந்­தன். விடி­யப்­பு­றம்­போல வந்து பாத்தா ஆள் அசை­யா­மக் கிடந்­தார்(அமைதி காத்­தார்). நாங்­கள் பலாலி உத­ய­க­லை­வாணி – அண்­ணா­வீ­தி­ய­டி­யில இருந்­த­னாங்­கள்.

பலாலி மேற்­குப்­பக்­கம். காணி உறு­தியை மட்­டும் எடுத்­துக்­கொண்டு உடுத்த உடுப்­போடை வெளிக்­கிட்­ட­னாங்­கள். அவர் அங்கை செத்­தல் மிள­காய் யாவா­ரம் செய்­த­வர். இடம்­பெ­யந்­த­தி­லை­யி­ருந்து தொழி­லு­கள் அப்­பி­டி­யிப்­பி­டித்­தான். மீன் யாவா­ரத்­துக்­குப் போற­வர். அவ­ருக்கு வருத்­தம் வந்­திட்­டுது. இதிலை ரெண்டு பரப்­புக் காணி வாங்­கி­னது. சமுத்­தி­யிலை லோன் எடுத்­த­னாங்­கள்… கிழமை லோன்…’’ இவ­ரும் இழுத்­தார்.

‘‘இனி எப்­பிடி லோன் கட்­டு­வீங்­கள்…’’
‘’தோட்­ட­வே­லைக்­குப் போய்த்­தான் கட்­ட­வே­ணும்’’
‘‘என்ன வேலை?’’
‘‘வெங்­கா­யத் தோட்­டத்­திலை கூலி­வேலை செய்­யப்­போ­னால், அறு­நூ­று­ரூபா தரு­வி­னம்’’

() () () ()

அநேக ஆண்­கள் வேலைக்­குப் புறப்­பட்­டு­விட்­டார்­கள். குழந்தை ஒன்றை ஏணைக்­குள்­ளிட்­டுத் தலாட்­டிக் கொண்­டி­ருந்­தார் ஒரு தாய். சிறு­வர்­க­ளைப் பாட­சாலை முடித்து அழைத்து வந்­தார்­கள் சில தாய்­மார்.

பாட­சா­லைப் பரு­வத்­தி­னர் அனை­வ­ரும் பாட­சா­லைக்­குப் போயி­ருந்­தார்­கள். தப்­பித் தவ­றி­ய­வர்­க­ளா­கச் சூழ்­நி­லை­யால் சிலர் நின்­று­கொண்­டி­ருந்­தார்­கள். சிலர் குழந்­தை­களை இடுப்­பில் தாங்­கி­ய­படி. முதிய தாய் ஒரு­வர் கொட்­டில் நிழ­லுக்­குள் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்­தார். மற்­றைய அனை­வ­ரும் ‘மல­ச­ல­கூட’ கட்­டுப்­ப­ணி­யில் வெயில் காய்ந்­த­னர். இறந்த வீட்­டுக்­குத் துக்­கம் விசா­ரிப்­ப­தற்­கும் ஓரி­ரு­வர் வந்­து­போ­யி­னர். ‘லோன்’ கட்­டு­வ­தற்­குப் போன­வர்­கள் ஓரி­ரு­வ­ராக இருப்­பி­டத்­துக்கு வந்­து­கொண்­டி­ருந்­த­னர். இவை அங்கு கவ­னித்­தவை.

சொந்­தக் காணி­க­ளைப் பறி­கொ­டுத்­தி­ருக்­கி­றார்­கள். இருந்த இடத்தை விட்­டும் எழுப்­பப்­பட்­டு­விட்­டார்­கள். தனக்­குத் தேவை­யான இடத்­தில் நீதியை வழங்­கிக் கச்­சி­த­மாக் காரி­ய­மாற்­று­கி­றது நீதி­மன்­றம். இங்­குள்ள அரச கட்­ட­மைப்­புக்­க­ளும் நீதி­மன்­றத்­துக்­குச் சளைத்­து­வி­ட­வில்லை. இன்­றைக்கு வெயி­லில் வெந்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள் அவர்­கள். ஆனால் அதன் பின்­ன­ணி­கள் எவ­ரா­லும் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை. தீர்­வு­மில்லை.

‘‘என்ன வெயி­லப்பா… என்ன வெக்­கை­யப்பா…’’ என்று சலித்­த­படி வீடு­க­ ளுக்­குள்­ளும் அலு­வ­ல­கங்­க­ளுக்­குள்­ளும் இன்­னும்­பிற கட்­ட­டங்­க­ளுக்­குள்­ளும் பதுங்­கி­யி­ருக்­கும் நாமெல்­லாம் எவ்­வ­ளவு பாக்­கி­ய­சா­லி­கள் என்­பது அவர்­க­ளு­டன் தங்­கி­யி­ருந்த கணங்­க­ளில் புரிந்­தது. அது வலி­களை உணர்ந்த தரு­ணம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!