பிடியாணையில் இருந்து பிரிகேடியரைக் காப்பாற்ற களமிறங்கியது வெளிவிவகார அமைச்சு!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட அனைத்து நடவடிக்கைகளையும் மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இ

இந்த நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகரின் ஊடாக பிரித்தானிய நீதிமன்றத்தில் அறிவிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தரப்பு நியாயங்களை ஆதாரங்களுடன் வழங்குமாறு திலக் மாரப்பனவிடம், பிரித்தானியா உயர்ஸ்தானிகர் கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!