மலேசியப் போர்க்கப்பலில் இருந்து அதிகாரியை மீட்டு வந்த சிறிலங்கா கடற்படை

சிறிலங்காவுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த மலேசிய போர்க்கப்பல் ஒன்றில், நோயுற்றிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் உள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்புச் செயலகத்துக்கு, மலேசிய தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று விரைந்து சென்று, மலேசியப் போர்க்கப்பலில் இருந்து, நோயுற்றிருந்த நிலையில் அவசர சிகிச்சை தேவைப்பட்ட கடற்படை அதிகாரியை மீட்டு வந்தது.

மலேசிய கடற்படை அதிகாரி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!