பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய உணவில் பாம்பு

மகாராஷ்டிராவில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இருந்த உணவில் பாம்பு இறந்து கிடந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் நான்டட் அருகே கர்கவன் ஜில்லா பரிஷத் ஆரம்ப பாடசாலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல மாணவர்களுக்கு மதிய உணவாக கிச்சடி தயாரிக்கப்பட்டது.

பாடசாலையின் ஊழியர் கிச்சடி பரிமாறுவதற்காக, பாத்திரத்தை திறந்த போது பாம்பு ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை உறுதிசெய்த பின்னர் உணவு வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட்டது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பாடசாலை கல்வித்துறை சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!