ரொஹிங்­யர்­க­ளுக்கு புய­லால் பேரா­பத்து!!

மியன்­மார் அர­சின் இனச் சுத்­தி­க­ரிப்­பில் இருந்து தப்­பித்து பங்­க­ளா­தே­ஷூக்­குச் சென்று அடைக்­க­லம் புகுந்­துள்ள சுமார் 7 லட்­சம் ரொஹிங்­யர்­கள் புய­லால் தாக்­கப்­ப­டும் அபா­யம் உள்­ளது என்று ஐக்­கிய நாடு­கள் சபை எச்­ச­ரித்­துள்­ளது.

அக­தி­க­ளாக இடம்­பெ­யர்ந்­தோர் பங்­க­ளா­தே­ஷின் கசார் பகு­தி­யில் தற்­கா­லி­கத் தங்­கு­மி­டங்­கள் அமைக்­கப்­பட்டு தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். கசார் பகுதி வரு­டா­வ­ரு­டம் புய­லால் பெரும் பாதிப்­புக்­களை எதிர்­கொள்­ளும் இடம். அது மலைப் பாங்­கான பிர­தே­ச­மா­க­வும் இருப்­ப­தால் அவ்­வப்­போது மண் சரி­வு­க­ளும் ஏற்­ப­டு­வ­துண்டு.

இத­னால் ரொஹிங்­யர்­கள் புய­லால் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளை­யும் பேரா­பத்­துக்­க­ளை­யும் எதிர்­கொள்ள வாய்ப்­புள்­ளது என்று ஐக்­கிய நாடு­கள் சபை எச்­ச­ரித்­தது.

ஐக்­கிய நாடு­கள் சபை­யின் புலம் பெயர்ந்­தோர் அமைப்­பின் அதி­கா­ரி­யா­கச் செயற்­பட்­டு­வ­ரும் மக்­கியூ என்­ப­வர் கசார் அக­தி­கள் முகா­மின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­க­வும் உள்­ளார்.

ரொஹிங்ய மக்­க­ளுக்கு பன்­னாட்டு உத­வி­கள் அவ­சி­யம் என்று தெரி­வித்­தார்.
‘‘பங்­க­ளா­தே­ஷில் மழைக்­கா­லம் தொடங்­கப் போகி­றது. புயல் காற்று, பலத்த மழை போன்ற நேரங்­க­ளில் பல இடங்­க­ளில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­ப­டும். மலைப் பகு­தி­க­ளில் நிலச்­ச­ரி­வும் ஆங்­காங்கே நடக்­கும். இந்த நிலை­யில் அக­தி­கள் முகா­மில் உள்ள ரொஹிங்ய முஸ்­லிம்­க­ளின் பாது­காப்­புக் கேள்­விக் குறி­யாக உள்­ளது. உட­ன­டி­யாக அவர்­க­ளுக்கு பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளைச் செய்து கொடுக்க வேண்­டும். அதற்கு உலக நாடு­கள் கணி­ச­மான அளவு நிதி ஒதுக்க வேண்­டும்’’ என்று அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!