மேரி கொல்வினை சிரிய அரசாங்கமே கொலை செய்தது- அமெரிக்க நீதிமன்றம்

பத்திரிகையாளர் மேரிகொல்வின் கொல்லப்பட்டமைக்கு சிரியாவின் பசார் அல் அசாத் அரசாங்கமே காரணமென அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிரிய அரசாங்கம் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்காகவும் தனக்கு எதிரான எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காகவும் திட்டமிட்டு பத்திரிகையாளர்களை இலக்குவைத்தது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது

பத்திரிகையாளர் என்பதால் மேரிகொல்வின் விசேடமாக இலக்குவைக்கப்பட்டார் என தெரிவித்துள்ள நீதிபதி சிரியாவில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புணர்வுகள் அதிகரித்து வருகின்றன என செய்திகளை வெளிஉலகிற்கு கொண்டு செல்பவர்களை மௌனமாக்குவதற்காகவே மேரி கொல்வின் கொல்லப்பட்டார் எனவும் குறிப்பி;ட்டுள்ளார்

யுத்தகளஙகள் குறித்ததும் யுத்தங்கள் குறித்தும் நாங்கள் அறிந்துகொள்வதற்கான முக்கியமான பங்களிப்பை செய்த பத்திரிகையாளர் இலக்குவைக்கப்பட்டு கொல்லப்பட்டமை மிகவும் மூர்க்கத்தனமான விடயம் என தெரிவித்துள்ள நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேரிகொல்வின் 2012 ம் ஆண்டு சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அவரின் தற்காலிக ஊடக நிலையத்தின் மீது இடம்பெற்ற எறிகணை தாக்குதலில் கொல்லப்பட்டார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!