வேலைப்பார்க்க மறுத்த விவசாயியை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம் – 4 பேர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தன்னுடைய நிலத்தில் வேலைப்பார்க்க மறுத்த விவசாயியை வலுக்கட்டாயமாக சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் படாயுன் மாவட்டத்தில் உள்ள கஸ்ராட்பூர் பகுதியை சேர்ந்த சீதாராம் வால்மிகி என்பவர் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தில் பணிபுரிய மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நிலத்தின் உரிமையாளர்கள் அவரை அடித்துள்ளனர். பின்னர் மரத்தில் கட்டி வைத்து சிறுநீரை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வால்மிகியின் மனைவி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் 4 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அப்பகுதி ஐஜி தருவ் கண்ட் தாகூர் வால்மிகியின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார்.

வேலைப்பார்க்க மறுத்த விவசாயியை வலுக்கட்டாயமாகசிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!