மே தினத்தின் வரலாற்று முக்கியத்துவமும் வெசாக்தினக் கூட்டில் ஆட்சியின் மறுப்பும்!!

கடந்து சென்ற 19 ஆவது நூற்­றாண்டு மனிதகுல வர­லாற்­றில் பல்­வேறு திருப்புமுனை­ க­ளுக்கு வழி­வ­குத்த நிகழ்­வு­க­ளைக் கொண்­ட­தா­கும். அவற்­றில் ஒன்றே அனை­வ­ரும் இன்று அனு­ப­வித்­து­வ­ரும் எட்டு மணி­நேர வேலை என்­ப­தா­கும். அதற்­காக அமெ­ரிக்­கத் தொழி­லா­ளர்­க­ளால் முன்­னெ­டுக் கப்­பட்டு வெற்றி கொள்­ளப்­பட்ட நாளே, மே முத­லாம் திகதி நினைவு கொள்­ளப்­ப­டும் மே தின­மா­கும்.

அத்­த­கைய பன்­னாட்­டுத் தினத்­தைத் தமது பௌத்த முதன்­மை­யைக் காட்டி மறுக்­க­வும் மாற்­ற­வும் முனை­வது அப்­பட்­ட­மான தொழி­லா­ளர் விரோத நிலைப்­பா­டா­கும்.

இது ஏற்­க­ன­வே­ இலங்­கை­யில் இடம்­பெற்று வந்­துள்ளது. இந்த வருடமே தினத்­தைப் புனித வெசாக்­கைச் சாட்­டாக வைத்து அரசு மே முத­லாம் திக­தி­யி­லான பொது விடு­மு­றையை இல்­லா­மல் செய்து மே ஏழாம் திக­தியை மே தின­மாக அறி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யில் மே தின வர­லாறு பற்­றி­யும் அந்­தத் தினத்­தின் முக்­கி­யத்­து­வம் மறுக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளில் இடம்­பெற்ற போராட்­டங்­கள் சம்­பந்­த­மா­க­வும் குறிப்­பி­டு­ வது அவ­சி­ய­மா­கும்.

தொழி­லா­ளர் சுரண்­டல்­களை
எதிர்த்து வெடித்­தது பேரணி

பத்­தொன்­ப­தாம் நூற்­றாண்டு முத­லா­ளித்­துவ உற்­பத்தி முறை வளர்ச்­சி ­பெற்று பலம்­பெற்று வந்த காலப்­ப­கு­தி­யா­கும். மூல­தன முத­லீட்­டா­ளìர் கள் பெரு இலா­ப­ம­டை­ய­வும் தொழி­லா­ளர்­கள் ஒட்­டச் சுரண்­டப்­ப­டு­வ­து ­மான சூழலே அன்று நில­வி­யது.

பத் தொன்­ப­தா­வது நூற்­றாண்­டின் நடுப்­ப­கு­தி­யில் ஐரோப்­பிய அமெ­ரிக்க ஆஸ்­திரே­லி­யத் தொழி­லா­ளர்­கள் மத்­தி­யில் தமது நிலை பற்­றிய விழிப் பு­ணர்வு தோன்ற ஆரம்­பித்­தது. அதி­லி­ருந்து மூன்று விட­யங்­கள் வற்­பு­றுத்­தப்­பட்­டன. வேலை நேரக்­கு­றைப்பு, சம்­பள அதி­க­ரிப்பு, சங்­கம் வைக்­கும் உரிமை போன்­ற­னவே அவை­யா­கும்.

பதி­னெட்டு, பதி­னாறு, பதி­நான்கு, பன்­னி­ரண்டு, பத்து மணித்­தி­யா­லங்­கள் தொழி­லா­ளர்­கள் வேலை செய்ய வேண்­டும் என முத­லா­ளி­ க­ளால் நிர்­பந்­திக்­கப்­பட்டு வந்த சூழ­லி­ லேயே எட்டு மணி­நேர வேலை என் பது தொழி­லா­ளர்­க­ளால் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

அதா­வது 24 மணி­நே­ரம் கொண்ட ஒரு நாளில் எட்டு மணி­ நேர வேலை எட்டு மணி­நேர ஓய்வு, மிகுதி எட்டு மணி­நே­ரம் ஏனைய விட­யங்­க­ளைக் கவ­னிப்­பது என வகுக்­கப்­பட்டே எட்டு மணி­நேர வேலை என் பது பொதுக் கோரிக்­கை­யாக்­கப்­பட்­டது. இதற்­கான தொழி­லா­ளர்­க­ளின் போராட்­டங்­களை அமெ­ரிக்­கத் தொழி ­லா­ளர்­கள் முன்­வைத்து அவ்­வப்­போது வேலை நிறுத்­தங்­கள் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வந்­த­னர்.

இக்­கால கட்­டத்­தி­லேயே ஜேர்­ம­னி­யின் கார்ல் மாக்ஸ், பிர­டெக்ற் ஏங்­கல்ஸ் மற்­றும் அவர்­க­ளோடு இணைந்­த­வர்­க­ளால் கம்­யூ­னிஸ்ட் கட்சி அறிக்கை என்­பது 1848ஆம் ஆண்­டில் வெளி­யி­டப்­பட்­டது. இந்த அறிக்கை ஐரோப்­பிய அமெ­ரிக்­கத் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் ஏனைய உலக நாடு­க­ளின் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் பெரும் உந்­து­த­லை­யும் உற்­சா­கத்­தை­யும் வழங்­கி­யது.

அதன் வழி­யில் அமெ­ரிக்­கத் தொழி­லா­ளர்­கள் தமது எட்டு மணி­நேர வேலை என்­கிற கோரிக்­கை­யைப் போராட்­ட­மாக்­கி­னார். 1870 -/80களில் அவை வேக­ம­டைந்­தன. 1886ஆம் ஆண்­டின் மே முத­லாம் திகதி சிக்­காக்கோ நக­ரின் தொழி­லா­ளர்­கள் பெரும் வேலை­நி­றுத்­தங்­க­ளி­லும் ஆர்ப்­பாட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர்.

அன்று பொலி­ஸார் நடத்­திய தாக்­கு­தல்­க­ளில் தொழி­லா­ளர்­க­ளின் செங்­கு­ருதி வீதி­க­ளில் ஓடி­யது. வெண்­சட்­டை­கள் குரு­தி­யில் தோய்ந்து செந்­நி­ற­மா­கிக் கொண்­டன. அன்­றைய சம்­ப­வங்­க­ளைக் கண்­டித்து மே 3ஆம் 4ஆம் திக­தி­க­ளில் தொழி­லா­ளர்­க­ளின் பெரும் ஆர்ப்­பாட்­டம் ஒழுங்கு செய்­யப்­பட்டு சிக்­காக்கோ முடக்­கப்­பட்­டது.

மே தினத்­துக்­கான விதை

அவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு முத­லா­ளி­க­ளால் பல்­வேறு குழப்­பங்­கள் கொடுக்­கப்­பட்­டன. ஆர்ப்­பாட்­டத்­தின் குண்­டொன்று வெடித்­த­தில் ஏழு தொழி­லா­ளர்­க­ளும், நான்கு பொலி­ஸா­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

இந்த அசம்­பா­வி­தத்­துக்கு தொழி­லா­ளர்­க­ளின் தலை­வர்­கள் குற்­ற­வா­ளி­க­ளாக்­கப்­பட்டு அவர்­க­ளில் நால்­வ­ருக்கு தூக்­குத் தண்­டனை தீர்ப்­பி­டப்­பட்­டது. அந்த நால்­வ­ரும் தூக்கு மேடை­யில் வைத்து இறு­தி­யா­கக் கூறி­யவை, ‘’எமது கல்­ல­றை­க­ளின் மௌனம் ஆயி­ரம் சொற்­பொ­ழி­வு­களை விட அதி­க­மா­ன­வற்­றைக் கூறிக் கொண்­டே­இ­ருக்­கும்’’ என்­ப­தா­கும்.

இத்­த­கைய குருதி தோய்ந்த வர­லாற்­றுக்கு வித்­திட்ட மே முத­லாம் திகதி தொழி­லா­ளர் தின­மாக அங்­கீ­கா­ரம் பெற்­றது. 1886ஆம் ஆண்டு இந்த அங்­கீ­கா­ரம் கிடைத்­தது. இதன்­படி இந்த வருட மே தினம் 132ஆவது மே தின­மா­கும்.

இலங்­கை­யில் மே தினம்
இலங்­கை­யில் அந்­நிய கொல­னிய ஆட்­சிக் காலத்­தி­லும் சுதந்­தி­ரம் எனப்­ப­டு­வ­தற்­குப் பின்பு ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆட்­சி­யி­லும் மேதி­னம் விடு­முறை நாளாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் தொழி­லா­ளர்­க­ளும் தொழில் சங்­கங்­க­ளும் இடது சாரிக் கட்­சி­க­ளும் மே தினத்தை மே முத­லாம் திகதி நினைவு கூர்ந்து முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கி­றார்­கள்.

1956ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தின் பின்பே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான அரசே மே தினத்தை விடு­முறை தின­மாக்­கிக் கொண்­டது. எனி­னும், வெசாக்­தி­னத்­தை­யொட்டி மே தினத்தைத் தடை­செய்து வந்த நிகழ்­வு­கள் இலங்­கை­யில் ஏற்­க­னவே இடம்­பெற்­ற­வை­யா­கும். ஆனால் அரச தடை­க­ளை­யும் மீறி மே முத­லாம் திக­தியே மே தினத்தை நடத்­திய சம்­ப­வங்­கள் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்று வந்­துள்­ளன.

1965ஆம் ஆண்டு மேதி­னத்­தில் ஊர்­வ­லங்­கள் நடத்­தக் கூடாது, கூட்­டங்­கள் மட்­டும் என அன்­றைய ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தேசிய அரசு ஆணை­யிட்­டது. அதனை மீறித் தொழி­லா­ளர்­க­ளும் உழைக்­கும் மக்­க­ளும் ஊர்­வ­லம் நடத்­தி­னர். யாழ்ப்­பா­ணம் விதி விலக்­கில்லை.

1969ஆம் ஆண்­டில் மே தினத்­துக் குத் தடை
1969ஆம் ஆண்டு

மேதி­னத்தை அன்­றைய அரசு வெசாக்­தி­னத்­தைச் சாட்­டாக வைத்து ஊர்­வ­லங்­கள் கூட்­டங் க­ளுக்­குத் தடை­வி­தித் தது. இதனை மீறி மேதி­னத்தை அதன் முத­லாம் திக­தியே நடத்­து­வது என அன்­றைய நா.சண்­மு­க­தா­சன் தலை­மை­யி­லான புரட்­சி­க­ரக் கம்­யூ­னிஸ்ட் கட்சி தீர்­மா­னித் தது.

அதன் அடிப்­ப­டை­யில் கொழும்­பி­லும் யாழ்ப்­பா­ணத்­தி­லும் மேதி­னம் சட்­ட­ம­றுப்­பாக இடம்­பெற்­றது. கொழும்­பில் ஊர்­வ­லம் ஆரம்­பிக்­கும் இடத்தை முன்­கூட்­டியே பொலி­ஸார் மோப்­பம் பிடித்­த­தால் ஊர்­வ­லத்­தைத் தடுத்­து­விட்­ட­னர். ஆனால் கூட்­டத்தை பொலி­சார் தடுக்­க­மு­டி­யா­த­படி நடத்­தி­னர்.

ஆனால் யாழ்ப்­பா­ணத்­தில் மேதின ஊர்­வ­லம் வெற்­றி­க­ர­மா­கப் பொலி­ஸாரின் கண்­க­ளில் படாது ஆரம்­பித்து சுமார் இரண்டு கி.மீ. தூரம்­வரை நடத்­தப்­பட்­ட­து­டன் முடி­வுக்­குச் சற்று முன்­ப­தாக முற்­ற­வெ­ளிக்கு அண்­மை­யாக வைத்து பொலி­ஸா ரால் வழி­ம­றிக்­கப்­பட்­டுக் கடும் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில் தலைமை தாங்­கிச் சென்ற கம்­யூ­னிஸ்ட் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான கே. ஏ. ப்பிர­ம­ணி­யம் கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

கஸ்­தூ­ரி­யார் வீதி, யாழ் பஸ் நிலை­யம், ஸ்ரான்லி வீதி, முட்­டாஸ் கடைச் சந்தி, கே.கே.எஸ் வீதி வழி­யாக யாழ். முற்­ற­வெளி நோக்கி ஊர்­வ­லம் சென்­றது. தற்­போ­தைய கூட்­டு­ற­வுச் சங்க கட்­டி­டத்­திற்கு அண்­மை­யா­கத் துப்­பாக்­கி­கள், குண்­டாந்­த­டி­கள், தடுப்­புத் தட்­டி­ க­ளு­டன் பொலிஸ் படை வீதி­யின் குறுக்கே நிறுத்­தப்­பட் டி­ருந்­தது. கலைந்து செல்­லு­மாறு பொலிஸ் கட்­ட­ளை­யிட்­டது.

இது எங்­க­ளது பன்னாட்டு உரி­மைத்­தி­னம் என தலைமை தாங் கிச் சென்ற கே. ஏ.சுப்­பி­ர­ம­ணி­யம் உரத்­துக் கூற ஊர்­வ­லத்­தி­னர் முழக்­க­மிட்­ட­னர். குண்­டாந்­த­டித் தாக்­கு­த­லுக்கு கட்­ட­ளை­யி­டப்­பட்­டது. முன்­ன­ணி­யில் சென்­றோர் மீது பொலிஸ் மிரு­கத் தன­மா­கத் தாக்­கி­யது.

குருதி வீதி­யில் வழிந்­தோ­டி­யது. கண்­ணீர் புகை­யும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அன்று போன்றே இன்­றும் மேதி­னம் மறுக்­கப்­ப­டு­கி­றது. சிங்­கள பௌத்­தம் என்ற மேலா­திக்­கத்­துக்­குள் இந்த நாடு ஆழ­மாக மூழ்­கி­விட்­டது. தொழி­லா­ளர்­க­ளின் தினம் முடக்­கப்­ப­டு­வது அவர்­க­ளின் உழைப்பை கொச்­சப்­ப­டுத்­து­வது போன்­றதே. தொழி­லா­ளர்­கள் இல்­லை­யேல் இலங்­கை­யில்லை. இலங்கை மட்­டு­மல்ல எது­வும் இல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!