வடக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று மே தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

வடக்கின் பல்வேறு பகுதிகளில் இன்று மே தின நிகழ்வுகள் முன் னெடுக்கப்படவுள்ளன. மே தினத்தை முன்னிட்டு பேரணிகள், கூட்டங் கள் என பல்வேறு நிகழ்வுகள் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற் சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்தவகையில் த.தே.கூட்ட மைப்பின் மாபெரும் மே தினக் கூட் டம் மாலுசந்தி மைக்கல் விளை யாட்டு கழக மைதானத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 3.00 மணிக்கு நெல்லி யடி சந்தைக்கு முன்பாகவிருந்து ஆரம்பமாகும் பேரணி
நெல்லியடி சந்தியை வந்தடைந்தது அங்கிருந்து வதிரிச் சந்தியூடாக மாலுசந்தியினை வந்தடைந்து மைதானத்தில் நிறைவடையும். பேரணியில் முன்னால் அரசியல் தலைவர்கள் செல்ல பின்னால் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் பேரணியாகச் சென்று மைதானத்தில் நிறைவடைய மைதா னத்தில் மேதினக்கூட்டம் இடம் பெறும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்ன ணியின் மே தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெற வுள்ளது.இதன் ஆரம்ப நிகழ்வாக மே தின ஊர்திப் பேரணி பருத்தித் துறை வீதியிலுள்ள சட்டநாதர் கோவிலடியில் பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி வழியாக கிட்டு பூங்காவை சென்ற டைந்ததும் பொதுக்கூட்டம் ஆரம்ப மாகும்.

மக்கள் விடுதலை முன்னணி யின் மே தின நிகழ்வில் இன்று மாலை 3 மணிக்கு யாழ் றக்காவீதி சுண்டிக்குளி மைதானத்தில் ஊர் வலம் ஆரம்பமாகி யாழ் நகரசபை மைதானத்தில் கூட்டம் இடம்பெறும்

புதிய ஜனநாயக மாக்சிச லெனி னிசக் கட்சியின் மே தின நிகழ்வில் இன்று காலை 9.30 மணிக்கு வவு னியா தமிழ் மத்திய மகாவித்தி யாலயத்தின் முன்பாக பேரணி ஆரம் பித்து 10.30 மணிக்கு வவுனியா நகரசபை புதிய கலாசார மண்டபத்தில் பொதுக்கூட்டம் இடம் பெறவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!