ட்ரம்பின் பெயரால் மன உழைச்சலுக்கு ஆழான சிறுவன்

நேற்று ட்ரம்பின் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 13 விருந்தினர்களில் ஒரு பள்ளி சிறுவனும் இடம்பெற்றுள்ளார்.

வில்மிங்டனில் வசிக்கும் 11 வயது ஜோஷ்வா ட்ரம்ப்புக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. ஆனால் பெயரில் ட்ரம்ப் என இருப்பதால் தனது மகனை முட்டாள், அறிவிலி என அவனது சக வகுப்பு நண்பர்கள் கிண்டல் செய்தனர் என்கின்றனர் அவரது பெற்றோர்கள்.

பிரதிநிதி சபை உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாஷிங்டனில் உள்ள கேபிட்டோலுக்கு அழைக்கப்பட்டனர். கேபிட்டோல் என்பது சட்டமியற்றும் குழுவின் சந்திப்புகள் நடைபெறும் இடம்.

ஜனாதிபதி மற்றும் அவரின் மனைவியின் அழைப்பின் பேரில் 13 சிறப்பு விருந்தினர்கள் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்ட்டுள்ளனர்.

ஜோஷ்வா ட்ரம்ப்பின் பெற்றோர்கள் மேகன் ட்ரம்ப் மற்றும் பாபி பெர்டோ கடந்த டிசம்பரில் ஏபிசி – டபிள்யூ வி பி ஐ தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், பள்ளியில் தனது மகனை கொடுமைப்படுத்தும் நிகழ்வு 2015 ல் ட்ரம்ப் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்ததில் இருந்து தொடங்கியது என்கிறார்.

தனது பெயரில் ட்ரம்ப் இருப்பதால் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளான அச்சிறுவனை அவரது பெற்றோர்கள் பள்ளியில் இருந்து நிறுத்தியிருக்கிறார்கள். அதன் பின்னர் ஒரு வருடம் வீட்டிலேயே அவர் படித்துவந்தார். பின்னர் நடுநிலை பள்ளியில் இணைந்தார்.

புதிய பள்ளியிலாவது தனது மகனுக்கு கேலி தாக்குதல்கள் நடக்காது என அவர்கள் நம்பினார்கள் ஆனால் அங்கும் அது தொடர்ந்தது.

அவரின் தாய் மேலும் குறிப்பிடுகையில்,

எனது மகன் அவனையே வெறுத்துக்கொள்கிறான். அவன் தனது கடைசி பெயரை வெறுக்கிறான். அவன் எப்போதும் சோகமாகவே இருக்கிறான். தனது வாழ்க்கையே வெறுத்துவிட்டான்” என ஜோஷ்வா ட்ரம்பின் தாய் மேகன் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெள்ளை மாளிகையின் அறிக்கையில், ஜோஷுவாவுக்கு கடைசி பெயரில் ட்ரம்ப் என இருப்பதால் கேலி தாக்குதலுக்கு அவர் உள்ளானபோதும் கூட அமெரிக்காவின் முதல் குடிமகள் மற்றும் ட்ரம்ப் குடும்பத்தின் ஆதரவுக்கு அச்சிறுவன் நன்றியுடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!