தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு

சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்துணிவு கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், விண்ணப்பதாரிகள், கபொத சாதாரண தரத் தேர்வில், இரண்டு திறமைச் சித்திகளுடன், ஆறு பாடங்களில் சித்திபெற்றிருப்பது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையிலேயே தூக்கிலிடுபவர் பதவிக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!