ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் – தற்கொலைக்கு முன் மாணவன் எழுதிய உருக்கமான கடிதம்

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தற்கொலை செய்துகொண்ட மாணவன், தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை ஒழிப்பதாக கூறியிருக்கிறார்.

சங்கரன் கோவில் அருகே உள்ள குருக்கள் பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் நெல்லை வண்ணாரப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் அவரது சட்டைப்பையில் இருந்தது. அதில், மதுபோதைக்கு அடிமையான தன் தந்தையை மீட்க முடியாததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தார். மேலும் டாஸ்மாக் கடைகளை மூடும் படி உருக்கமான வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.

மாணவர் தினேஷ் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அப்பா, நான் இறந்த பிறகாவது நீங்கள் குடிக்காமல் இருக்க வேண்டும். நீங்கள் குடிப்பதால் எனக்கு கொள்ளி வைக்கக்கூடாது. காரியம் பண்ணக் கூடாது. மணி அப்பாதான் காரியம் செய்ய வேண்டும். இதுதான் என் ஆசை. அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்.

இனிமேலாவது தமிழகத்தின் முதலமைச்சர் மதுபான கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம். இல்லை என்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்.

இவ்வாறு தினேஷ் கூறியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!