விக்னேஸ்வரனுக்கு எதிரான மேன்முறையீட்டு மனு- வியாழன்று விசாரணை ஆரம்பம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான விசாரணை வரும் 21ஆம் நாள் ஆரம்பிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்ரமசிங்கவின் முன்பாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, விசாரணைகள் 21ஆம் நாள் ஆரம்பிக்கப்படும் என்று நீதியரசர் அறிவித்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போது, சி.வி.விக்னேஸ்வரனும், அமைச்சர்களாக இருந்த அனந்தி சசிதரன் மற்றும் சிவனேசன் ஆகியோரும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை செயற்படுத்தாமல், நீதிமன்றத்தை அவமதித்தனர் என்று வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!