தூக்கில் போடுபவர் பதவிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை!

தூக்கில் போடுபவர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்டிருந்த போதிலும், இதுவரையிலும் ஒரு விண்ணப்பமேனும் கிடைக்கவில்லையென சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள், கடந்த 11ஆம் திகதி கோரப்பட்டிருந்தன. எதிர்வரும் 25 ஆம் திகதி, விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதியாகும். எனினும், கடந்த ஒருவாரகாலத்துக்குள் எந்த விண்ணப்பங்களும் கிடைக்கவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய,தெரிவித்தார்.

தூக்கில் போடுபவர் பதவிக்காக, விண்ணப்பங்களை அனுப்புபவர். ஆணாகவும் 18-45 ​வயதுக்கிடைப்பட்டவராகவும் இருக்கவேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!