இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா?: இம்ரான் கான் வாய்க்கொழுப்பு

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சொல்லும் இந்தியா எங்களை தாக்கினால் நாங்கள் திருப்பி அடிக்க மாட்டோமா? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானை பொருளாதார ரீதியாக தண்டிக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முதன்முறையாக இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

எங்கள் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்பக்கூடாது என்பதில் நாங்கள் அக்கறை காட்டி வருகிறோம். (புல்வாமா தாக்குதல் தொடர்பாக) பாகிஸ்தானில் இருக்கும் யாருக்காவது தொடர்பு இருப்பதற்குண்டான ஆதாரம் இந்தியாவிடம் இருந்தால் அதை எங்களுக்கு அளித்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் நாங்கள் எதிர்தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இந்தியா நினைத்தால், நாங்களும் திருப்பி அடிப்போம். போரை தொடங்குவது மனிதர்கள் கையில் உள்ளது, ஆனால், அது எங்கே போய் முடியும்? என்பது கடவுளுக்குதான் தெரியும். இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கப்பட வேண்டும் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!