தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த கூட்ட மைப்பினர் திருந்துவார்கள் என நினைப்பது முட்டாள்தனம் – கஜேந்திரகுமார்

உள்ளூராட்சித் தேர்தலில் தமது வாக்கு வங்கியை சுமார் இர ண்டு இலட்சம் வாக்குகளால் இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி னர் திருந்துவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். அது எங்களு டைய முட்டாள்தனம்.

அவர்கள் திருந்தப்போவதில்லை எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், அந்தப் பெரும் பின் னடைவிற்குப் பிற்பாடும் அவர்களோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அடிவரு டிக் கட்சிகளும் ஒட்டுக்குழுக்களும் இணை ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக பேரின வாதக் கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சி அமைத்துள்ளார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் நேற்று செவ்வாய்க் கிழமை நல்லூர் கிட்டுபூங்காவில் நடைபெற் றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு சில முக்கியமான பொறுப்புக்கள் உள்ளன. அந்த முக்கியமான அடிப்படை விடயங்களில் எமது அமைப்பு தீவிரமாக இயங்கிவருகின்றது.

மக்களது அன்றாட பிரச்சினைகளை எமது உள்ளூ ராட்சி உறுப்பி னர்கள் ஊடகவும் உள்ளூ ராட்சி சபை
களுக்கு வேட்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஏனயை உறுப்பினர்கள் ஊடாகவும் வெளிக் கொணர்ந்து தீர்வுகாணும்வகையில் எமது செயற்பாடுகள் அமையும்.

அதேபோல தமிழ்த் தேசத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமான விடயங்கள் இருக்கின்றன. எமது அமைப்பின் தலை மைப்பீடம் அந்த முக்கியமான கொள்கை விடயங்களில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகின்றது. முதலாவது எமது இனப்பிரச்சி னைக்கான தீர்வு.

அந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் தமிழ்த் தேசிய நீக்கத்தைச் செய்ய முடிவெடுத்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கம் செய்தால் மட்டுமே நாங்கள் கடந்த 70 வருடங்களாக நிராகரித்துவந்த நாங்களாகவே விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கொண்டு செல் லப்படுவோம் என்பதை நாங்கள் சுட்டிக் காட்டிவந்துள்ளோம்.

அந்தச் செயற்பாடுகள் போர் முடிந்த கையோடே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. தமிழ்த் தேசிய வாதத்தைப் பொறுத்தவரை எமக்கு மிக முக்கியமான அடையாளங்கள் உள் ளன. தமிழ்த் தேசிய பரம்பரையில் வளர்ந்து வந்த கட்சிகள்.

சிங்கக் கொடியை ஏற்றுக் கொண்டதில்லை. இரண்டாவது, இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களிற்கு எதி ரான அடக்குமுறை தினமாக பார்க்கின்ற விடயம்.

மூன்றாவது, தெற்கை மையப்படுத்தி செயற்படுகின்ற பேரினவாத கட்சிகளை நிராகரிக்கிறது. எமது மண்ணில் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கக்கூடாது எனச் செயற்படுவது.

இந்த மூன்று விடயங்களும் மிக முக் கியமான விடயங்கள். ஆனால் தமிழ் அரசி யலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கம் செய்வ தாக இருந்தால் மக்கள் இந்த மூன்று விடய ங்களையும் மறந்துவிட வேண்டும்.

அந்த வகையில்தான் தேசியத் தலைவரால் உரு வாக்கப்பட்டதாகக் கூறிவந்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப்போரா ட்டம் மௌனிக்கப்பட்ட பின் இலங்கையின் சுதந்திர தினத்தில் பங்கேற்றது.

இதே மேதினம் போன்று 2012 மே தின த்தில் ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் மேதினக்கூட்டம் நடத்தவேண்டும் எனக் கேட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்ட மிகக்கேவலமான செயல் அரங் கேறியது.

அந்தக் கொண்டாட்டத்தில் தமிழ்த் தேசியம் நிலைநாட்டப்பட்ட பின் அக் கட்சி யின் தலைவராக இருந்த சம்பந்தன் வரலா ற்றில் முதல் தடவையாக சிங்கக்கொடி ஏந்தினார்.

இது எல்லாம் அவர் வயது போன தன் மையினால் செய்த செயல்கள் அல்ல. தனது ஞாபகசக்தி குறைவினால் செய்த செயலும் அல்ல. அவ்வாறு பார்ப்பது எம்முடைய பல வீனம். இவை திட்டமிட்ட வகையில் செய்த செயல்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து தமிழ்த் தேசிய நீக்கம் செய்யவேண்டுமாக இரு ந்தால் இவ்வளவு காலமுமாகப் பார்க்கப்பட்ட சம்பவங்கள் எமது மனங்களில் இருந்து அக ற்றப்படவேண்டும்.

அவை பிழையானவையாக நாங்கள் கருதாமல் நாங்கள் முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்கின்ற நிலைக்கு மக்களைக் கொண்டுவர வேண்டும். அத ற்காக முன்னெடுக்கப்பட்ட விடயங்களே இவை.

இவற்றைத்தான் நாங்கள் எமது மக்களிடம் சுட்டிக்காட்டி வருகின்றோம் என மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!