கனடாவில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் : 6 பேர் காயம்!

கனடாவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். Trans – Canada அதிவேக வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து காரணமாக Trans – Canada அதிவேக வீதியூடான போக்குவரத்து சில மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக இந்தவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!