வடக்கு, தெற்கு மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி ஐ.தே.கவிலிருந்தே உதயமாவார் – அஜித் பி.பெரேரா

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் விருப்பினை வென்றெடுக்க கூடிய ஜனாதிபதி ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினால் மாத்திரமே தெரிவு செய்ய முடியும்.

சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி தேர்ந்தெடுத்துள்ளதாக டிஜிட்டல் உட்க்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து இடம்பெரும் கருத்து வேறுபாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

தற்போது அனைவரும் ஜனாதிபதி தேர்தலை நடத்தவதற்கே அனைவரும் தமது விருப்பத்தினை வெளியிட்டு வருகின்னர். பிரதான கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தனித்த இனம், பிரதேசம் மற்றும் சமயம் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைய முடியாது. தனி ஒரு இனத்தவர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதும் வெற்றிக்கு சாதகமாக அமையாது.

நமது நாட்டின் தேர்தல் நடைமுறைகளுக்கு அமைவாக அனைத்து இன, பிரதேச மற்றும் சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்த கூடியவர்களே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிக்கண்டுள்ளனர்.

எனவே இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எதிர்த்தரப்பினர் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சகல மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே தெரிவு செய்ய முடியும். வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் ஒன்றிணைக்க கூடிய சிறந்த தலைவர்களும் எம்மிடமே உள்ளனர்.

இரட்டை குடியுரிமையுடைய ஒருவரை ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது என மேலும் தெரிவித்ததார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!