மன்னார் புதைகுழி- அதிகாரபூர்வ ஆய்வறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான, றேடியோ கார்பன் அறிக்கை அதிகாரபூர்வமாக மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று, நீதிவான் சரவணராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில், மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்டு புளோரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட 6 எலும்புக்கூடுகளில் 5 எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கையை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச சமர்ப்பித்திருந்தார்.

இந்த அறிக்கை குறித்த ஆய்வகத்தின் இணையத் தளம் மூலம் பெறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கை, ஆய்வகத்தினால் அதிகாரபூர்வமாக மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டதல்ல என்பதால், அதனை வெளிப்படுத்த முடியாது என்றும், அதிகாரபூர்வ அறிக்கை கிடைத்ததும் அதனை வெளியிடுவதாகவும் நீதிவான் சரவணராஜா தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!