கைதிகள் நடத்தும் எரிபொருள் நிரப்பு நிலையம்: திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கோவையில், கைதிகள் நடத்தும் எரிபொருள் நிரப்பு நிலையம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அங்காடியை விரிவுபடுத்தும் விதமாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் அமைக்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து அங்கு, 22 சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு அதில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், 6 பம்பிங் இயந்திரங்கள் கொண்ட எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் இன்றயதினம் திறந்து வைத்தார்.இதன்முதல் விற்பனையை, கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி அறிவுடை நம்பி, ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், இந்தியன் ஒயில் கார்ப்பரேஷன் பொது மேலாளர் சுரேஷ், துணை பொது மேலாளர் மானஷ் ரவுத்ராய் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தில் முதன் முறையாக தண்டனை கைதிகளைக் கொண்டு நடத்தப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் இதுவே ஆகும். இங்கு 3 ஷிப்ட்டுகளில் கைதிகள் பணியாற்றுவார்கள். இவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழிர்களுக்கான சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சிறைத் துறைக்கு மாதம் 43 ஆயிரம் ரூபாயும், பணிபுரியும் கைதிகளுக்கு சம்பளமும் வழங்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!