நிலச்சரிவால் ‘ஜம்மு – ஸ்ரீநகர்’ தேசிய நெடுஞ்சாலை 3-வது நாளாக முடக்கம்.

ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை நிலச்சரிவு காரணமாக தொடர்ந்து 3-வது நாளாக மூடப்பட்டுள்ள நிலையில் சுமார் 1700 வாகனங்கள் சிக்கியுள்ளன. ராம்பன் (Ramban) மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக 270 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் ஐந்து இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைத் தடைகள் ஏற்பட்டுள்ள நிலையில் ராம்பன், உதம்பூர், ஜம்மு, சம்பா, கத்துவா மாவட்டங்களில் சுமார் 1700 வாகனங்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக் கூடும் என்று கூறப்படுவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சாலை மூடப்பட்டு வேறு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும், இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேறு சில சாலைகளிலும் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஷோபியான் மாவட்டம் உள்ளிட்டவற்றை ஜம்மு மண்டலத்தில் உள்ல பூஞ்ச் மாவட்டத்துடன் இணைக்கும் முகல் சாலை கடும் பனிப்பொழிவால் கடந்த ஒருமாதமாக மூடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!