அட்மிரல் கரன்னகொடவை தப்பிக்க வைக்க கோத்தாவின் ஏற்பாட்டில் விகாரையில் சிறப்பு வழிபாடு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு ஆசி வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பு -7 கிரகரி வீதியில் உள்ள சம்போதி விகாரையில் நேற்று மாலை 5 மணி தொடக்கம், அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு ஆசி வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவே இதற்கான ஒழுங்குகளை மறைமுகமாகச் செய்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளரான மிலிந்த ராஜபக்ச, இந்த வழிபாடுகளில் பங்கேற்குமாறு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்.

அட்மிரல் வசந்த கரன்னகொடவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவருக்காக பிரார்த்தனைகள் நடத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!