நாடாளுமன்ற குழப்ப அறிக்கை பக்கசார்பானது! – நிராகரிக்கிறார் கம்மன்பில

கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. இது பக்கசார்பான அறிக்கை என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார்.

இந்தக் குழப்பம் தொடர்பாக 59பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் 54 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள்.ஏனைய நான்கு பேர் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒருவர் ஜேவிபியையும் சேர்ந்தவர்களாவர். இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கள் யாவும் பக்கசார்ப்பானவை என்பது ஊர்ஜிதமாகிறது. எனவே அந்த குற்றச்சாட்டுக்களை தாம் நிராகரிப்பதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!