“ஜனாதிபதி தலையிடாவிடின் பொறுப்புள்ள எதிர்கட்சியாக நாம் நடவடிக்கை எடுப்போம்”

சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்ட கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி ஆல‍ை தொடர்பான சர்ச்சைக்குரிய விலைமனுக்கோரல், தனியார் பாடசாலைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கல் உள்ளிட்ட விடயங்களில் ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவ்வாறு ஜனாதிபதி தலையிடாத பட்சத்தில் பொறுப்புவாய்ந்த எதிர்கட்சியாக இதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார ஆய்வுபிரிவினால் இன்று வஜிராஸ்ரம விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!