அதிகாரப்பகிர்வு குறித்து பரிசீலிக்க 4 பேர் கொண்ட குழு – சிறிலங்கா அதிபரால் நியமிப்பு

புதிய அரசியலமைப்பின் அதிகாரங்களைப் பகிர்வு குறித்து பரிசீலிப்பதற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி சரத் அமுனுகம, எம்.ஏ.சுமந்திரன், ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், நேற்று மாலை அதிபர் செயலகத்தில் நடந்த கூட்டத்தின் போதே, இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!