விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இம்ரான் கான் தெரிவித்தது என்ன ?

செப்­டெம்பர் 11 தாக்­கு­த­லுக்கு முன்­ன­தா­கவே இந்­துக்­க­ளான விடுதலைப்­பு­லிகள் தற்­கொலைத் தாக்­குதல் முறை­மையை பயன்­ப­டுத்தி உள்­ளன என்று பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தீவி­ர­வா­தத்­திற்கு மதம் கிடை­யாது. தற்­கொ­லைப்­படைத் தாக்­கு­தல்கள் மதத்தின் பெயரால் நடப்­ப­தில்லை. இரட்டைக் கோபுர தாக்­கு­த­லுக்கு முன்­பாக உல­க­ளவில் அதிக தற்­கொ­லைப்­படை தாக்­கு­தல்­களை இலங்­கையின் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­களே நடத்­தி­யி­ருந்­தனர்.

இதில் தாக்­குதல் நடத்­தி­ய­வர்கள் இந்து மத நம்­பிக்­கையைக் கொண்­ட­வர்கள். ஆனால் மதத்தின் பெயரால் எந்தத் தாக்­கு­த­லையும் நடத்­தி­வில்லை. மாறாக தங்­க­ளது விரக்தி மற்றும் கோபத்தில் விளை­வா­கவே தாக்­கு­தல்­களை நடத்­தினர் என்றும் இம்ரான் கான் தெரி­வித்­துள்ளார்.

தற்­கொலைக் குண்­டுத்­தாக்­குதல் என்­பது பல­வீ­ன­மா­ன­வர்­களின் தந்­திரம். அதற்கு மதச்­சாயம் பூச­மு­டி­யாது. ஆனால் இந்­தத் ­தந்­திரம் ஏன் பய­ன்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான உண்­மை­யான கார­ணி­களை தேட­வேண்டும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்­திய விமா­னப்­ப­டையின் விமானி இன்­றைய தினம் விடு­விக்­கப்­ப­டுவார் என்று நேற்று பாரா­ளு­மன்­றத்தில் பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். இதன்போதே விடுதலைப் புலிகளின் தொடர்பிலும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!