வானூர்தி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் இடம்பெற்ற வானூர்தி விபத்தில் 9 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இராணுவ வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது என்று அமெரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானூர்தி விபத்துக்களான போது 5 இராணுவத்தினர் உட்பட 9 பேர் பயணித்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 பேர் உயிரிழந்தனர் என்று உத்தியோக பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், உள்ளூர் ஊடகங்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 எனக் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறாயினும் விபத்துக்கான காரணம் உடனடியாக வெளியாகவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!