தாரமங்கலம் அருகே பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து- இலங்கை அகதி கைது

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பள்ளி மாணவனை கத்தியால் குத்திய இலங்கை அகதியை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.

இந்த முகாமில் நிஷாந் (22) , அவரது சகோதரர் கிஷோர் ( 17)மற்றும் ஜெயந்தன் (23) உள்பட பலர் வசித்து வருகிறார்கள். நிஷாந் பாண்டிச்சேரியில் கேட்டரிங் டெக்னாலஜியும், கிஷோர் 11-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

ஜெயந்தனுக்கும், கிஷோருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கிஷோரின் தாய் குறித்து ஜெயந்தன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை கிஷோர் மற்றும் அவரது சகோதரர் நிஷாந்த் ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் அவர்களுக்கிடயே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதும் ஆத்திரம் ஆத்திரம் அடைந்த ஜெயந்தன், கிஷோரின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கிஷோர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிக்சசை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடத்திய தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், ஜெயந்தனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!