20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்த தம்பதினர்!

அமெரிக்காவில் கணவனுக்கும் மனைவிக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து ஆன நிலையில், கணவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மனைவி தனது சிறுநீரகத்தை தானம் செய்து மீண்டும் இணைந்துள்ளனர்.

பில் ஹென்ரிச்என்ற நபரும், மேரி ஜிக்லர் என்ற பெண்ணும் தங்களது 14 வயதிலேயே ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டனர்.

இதையடுத்து தங்களது 18ஆவது வயதில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் மனக்கசப்பு காரணமாக பில்லும், மேரியும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துகொண்டனர்.

இந்நிலையில்தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இருவரும் நட்பு பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பில்லுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

வைத்திய பரிசோதனையில் அவரின் சிறுநீரகம் பழுதடைந்ததும் உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சிறுநீரகம் தனக்கு பொருந்துகிறதா என பில் பரிசோதனை செய்த நிலையில் எதுவுமே பொருந்தவில்லை.

இது குறித்து அறிந்த பில்லின் முன்னாள் மனைவி மேரி தனது சிறுநீரகம் பில்லுக்கு பொருந்துகிறதா என பரிசோதித்தார்.

பரிசோதனையில் அவர் சிறுநீரகம் பொருந்துவது தெரியவந்தது. இதையடுத்து முன்னாள் கணவரான பில்லுக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்தார்.

இதையடுத்து நடைபெற்ற சத்திரசிகிச்சையில் பில்லுக்கு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இது குறித்து செய்தி வைரலான நிலையில் மேரியின் பரந்த மனதுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!