16 ஆண்டுகளுக்கு பின் மரணதண்டனை கைதிகள் விடுதலை!

தமது வாழ்நாளில் 16 ஆண்டுகள் சிறையில் கழித்த 6 மரணதண்டனை கைதிகளை இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கொலை மற்றும் பாலியல் வல்லுறவு வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட பழங்குடியினரே இவ்வாறு நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் கடந்த 2003ஆம் ஆண்டு மஹராஸ்ரா மாநிலத்தின் நாச்சிகல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலைசெய்ததாகவும், ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை 10 ஆண்டுகளின் பின்னர் நேற்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்லர் என நிரூபிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி 16 ஆண்டுகள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டமைக்காக மஹராஷ்ரா அரசு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!